நாக தோஷத்தை நீக்கும் நாகராஜர்

Sekar Tamil
கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ஊரில் அமைந்திருக்கும் நாகராஜா கோவில் மிகவும் பிரசத்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் விசேஷமாக இருக்கும். நாக தோஷம் இருப்பவர்கள், இந்த கோவிலிற்கு வந்து வழிப்பட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


கோயில் முன்வாசல் பக்கத்தில், குளம் உள்ளது. கோயிலிற்கு வரும் பக்தர்கள், குளத்தில் காலை அலம்பிய பின், சாமி தரிசனம் செய்வர். இந்த கோவிலில், நாகராஜர், சிவன், முருகன், விசாலாக்ஷி உள்ளிட்ட சன்னதிகள் இருக்கின்றன. 


மஞ்சள், பால், முட்டை போன்றவற்றை நாகராஜருக்கு படைத்து வழிபடலாம். பெண்கள், ஞாயிற்று கிழமைகளில், நாகராஜருக்கு பால் ஊற்றி, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவர். இவ்வாறு வழிபட்டு வந்தால், நாகதோஷம் நீங்கும். 


Find Out More:

Related Articles: