இன்னல்களை தீர்க்கும் தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவில்

frame இன்னல்களை தீர்க்கும் தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவில்

Sekar Tamil
இத்தலம் விழுப்புரம் மாவட்ட, விக்கிரவாண்டி ஊரில் அமைந்துள்ளது. இங்கு நாகம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வினாயகர், வள்ளி தெய்வானை, ஆறுமுகர் மற்றும் நாகர்களின் சன்னதிகளும் உள்ளன.


இங்கு நாகம்மனின் முகம் மெய்சிலிர்க்கும் வகையில் காட்சி தருகின்றது. நாகம்மனின் தலை பகுதி மட்டும் 5½ அடி அகலமும், 3½ அடி நீளமும் கொண்டதாகும்.


வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களை சந்தித்து வருபவர்கள், இத்தலத்திற்கு வந்து நாகம்மனை வழிபட்டால், துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


மேலும் ராகு - கேது தோஷம், திருமண தடை, நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்களுக்கு இத்தலத்தில் பரிகார பூஜை செய்யப்படுகிறது. 


மேலும் இத்தலத்திற்கு அருகே முத்தாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles:

Unable to Load More