குழந்தைகளுக்கு நலம் அருளும் சிவகுருநாத சுவாமி திருக்கோவில்

Sekar Tamil
இத்தலம் கும்பகோணத்தில் உள்ள சாக்கோட்டை என்ற ஊரில் அமைந்துள்ளது. இங்கு சிவநாதரும், சிங்கார வல்லி அம்மனும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 


இத்தலத்தில் உள்ள சிங்காரவல்லி அம்பாளுக்கு, பதினோறு வெள்ளிக்கிழமை விரதமிருந்து விளக்கேற்றி, அர்ச்சனை செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


மேலும் மழலைகள் நோய் நொடிகளில் இருந்து விடுபட, இங்கு வந்து தரிசிக்கலாம். குழந்தைகள் கல்வியில் உயர்ந்து, நோய் நொடிகள் இன்றி வாழ, இந்த அம்மன் அருள்புரிகிறார். கால பைரவர் இங்கு தனி சன்னதியில் அமர்ந்து அருள் புரிவதால், நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. 


இத்தலம் காலை 8.30 மணி முதல் 12.30 வரை இயங்கும். அதே போல, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயங்கி வருகிறது. 


Find Out More:

Related Articles: