புதுக்கோட்டை மாவட்டத்தில் கொன்னையூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமாகும். ஆடி மாதத்தில் மாரி அம்மனை நினைத்து, விரதம் இருந்து, இங்குள்ள நெல்லி மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தலத்தில் ஆடி மாத, வெள்ளி கிழமைகளில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
பெண்கள் விரதமிருந்து, இத்தலத்தில் உள்ள நெல்லி மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் உண்டாகும். அதே போல், நெல்லி மரத்தில், மஞ்சள் கயிறை கட்டினால் திருமணத் தடங்கல் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என்று பரவலாக பேசப்படுகிறது.
மேலும் பக்தர்கள், சுகப்பிரசவம் நடைபெற அம்மனுக்கு, வளையல் சாத்தி வழிபடுகின்றனர்.