திருமலை பிரமோற்சவத்திற்கு 700 சிறப்பு பஸ்கள்... இயக்கறாங்க...

frame திருமலை பிரமோற்சவத்திற்கு 700 சிறப்பு பஸ்கள்... இயக்கறாங்க...

Sekar Tamil
திருமலை:


700 சிறப்பு பஸ்கள்... பிரமோற்சவ விழாவிற்காக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். எங்கு? எதற்கு என்கிறீர்களா?


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் பிரமோற்சவ விழா சிறப்பாக நடக்க உள்ளது. இதை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக 700 சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


திருப்பதி கோயிலில் அக்.3-ம் தேதியில் இருந்து 11-ம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவ விழா நடக்க உள்ளது. விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை புரிவர்.


இதையடுத்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மெக்கானிக்குகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் திருமலையில் நடந்தது.


இதில் பக்தர்களின் வசதிக்காக பிரமோற்சவ விழா நேரத்தில் திருப்பதி-திருமலை, திருமலை-திருப்பதி மற்றும் திருப்பதி, திருமலையில் இருந்து மொத்தமாக 700 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது.


Find Out More:

Related Articles:

Unable to Load More