பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளில், புரட்டாசி மாதம் விரதம் இருந்தால் மிகவும் நல்லது.
கிரக தோஷம் உள்ளவர்கள், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், விரதம் இருந்து ஆஞ்சிநேயர் கோயிலுக்கு சென்று, வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது உண்மையாக கருதப்படுகிறது.
மேலும் அன்றைய தினம், காகத்திற்கு இலையில் எள்ளும் வெள்ளமும் கலந்த அன்னத்தை படைத்தால், சனியின் தாக்கம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்கள், சனிபகவானுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நன்மையை தரும்.
மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில், நம்மால் முடிந்த வரை பிறருக்கு நிறைய தர்மம் செய்யலாம்.ஆனால் அன்றைய தினம் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது.