
பேயுருவம் எடுத்து கயிலை சென்ற காரைக்கால் அம்மையார்

பேய்க்கோலம் தாங்கிய அம்மையார் அற்புத திருவந்தாதியும் திரு இரட்டை மணி மாலையும் பாடியருளினார். தலையால் நடந்து கயிலாயம் சென்று இறைவனை தரிசனம் செய்தார்.
காரைக்காலில் பரமதத்தரை திருமணம் செய்த புனிதவதி இல்லறம் என்னும் நல்லறத்தை சிறப்பாக நடத்தி வந்தபொழுது, மாம்பழம் வடிவில் விதி விளையாடியது. இல்லறம் நடத்த மட்டுமே நீங்கள் பிறக்கவில்லை என்பதை உணர்த்த இறைவன் திருவிளையாடல் நடத்தினார்.