அவ்வளவுதான்... முடிஞ்சிடுச்சு... ஜோகோவிச் வெளியேறினார்

frame அவ்வளவுதான்... முடிஞ்சிடுச்சு... ஜோகோவிச் வெளியேறினார்

Sekar Tamil
ரியோ:
அவ்வளவுதான்.. முடிஞ்சிடுச்சு... ஆட்டம் காலி... கிளம்பலாம்... கிளம்பலாம் என்று வெளியேறுகிறாராம். யார் என்று தெரியுங்களா?


ரியோ ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியிலும் தோற்றதால் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். 


இந்த முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் முதல் சுற்றிலேயே தன் மூட்டை முடிச்சை கட்டும் நிலைக்கு மாறினார். இது செர்பிய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.


இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த ஆண்கள்  ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 145-ம் நிலை வீரரான அர்ஜென்டீனாவின் ஜீவான் மார்ட்டின் டெல்போட்ரோவிடம் சரண் அடைந்தார். 


கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்திலும் இதே டெல்போட்ரோவிடம்தான் தோல்வி கண்டார் ஜோகோவிச் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles:

Unable to Load More