ஒலிம்பிக் மைதானத்தில் அறுந்து விழுந்த கேமரா... 7 பேர் காயம்...

frame ஒலிம்பிக் மைதானத்தில் அறுந்து விழுந்த கேமரா... 7 பேர் காயம்...

Sekar Tamil
ரியோ:
ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் கேமிரா விழுந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளை ஸ்பைடர் கேமிராக்கள் மூலம் எடுக்கப்பட்டு டெலிவி‌ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


இந்நிலையில் ஒலிம்பிக் மைதானத்தில் அந்தரத்தில் தொங்கும் இந்த ஸ்பைடர் கேமிராவின் வயர் அறுந்ததில் கேமிரா மைதானத்தில் விழுந்தது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.


ஏற்கனவே விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மைதானத்தின் அருகே பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More