வரலாற்று சாதனையும்... சிந்துவும்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Sekar Tamil
ரியோ:
ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் இன்று சாதனை படைப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் சிந்து வெற்றிப்பெற வேண்டி பல இடங்களில் பிரார்த்தனையும் நடந்து வருகிறது.


ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 7 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி தொடக்க சுற்றில் தோற்று நாக்-அவுட் வாய்ப்பை இழந்தது.


இதேபோல பெண்கள் இரட்டையர் பிரிவிலும் ஜீவாலா கட்டா- அஸ்வின் ஜோடியும் தொடக்க சுற்றில் தோற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவாலும், பெண்கள் ஒற்றையரில் தொடக்கச்சுற்றை தாண்டவில்லை.


பேட்மின்டன் களத்தில் பி.வி.சிந்து மட்டுமே உள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிக்கு இவர் முன்னேறி உள்ளார். 


இவர் மோதும் அரை இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் 6-ம் நிலை வீராங்கனையான நோஜோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டால் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியாகிவிடும். 

நோஜோமி ஒகுஹரா



அதுமட்டுமா? ஒலிம்பிக் பேட்மின்டனில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து முதல் இந்தியர் என்ற வரலாற்று பெருமையையும் சிந்து பெறுவார். இதனால் சிந்து மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் பல இடங்களில் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு வேளை அரை இறுதியில் தோற்றால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மோத வேண்டும்.


கடந்த ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் அரை இறுதியில் தோற்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் வென்றார். இதேபோல் இல்லாமல் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



Find Out More:

Related Articles: