புதுடில்லி:
வெண்கலம்... வெள்ளியாகிறது... வெள்ளியாகிறது என்ற செய்திதான் விளையாட்டுத்துறையில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அது எப்படிங்க வெண்கலம்... வெள்ளியாகும் என்று கேட்கிறீர்களா? ஆகும்ங்க... விஷயம் என்னவென்றால்... இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார். இப்போது அந்த பதக்கம்தான் வெள்ளிப்பதக்கமாக மாற இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களின் ஒருவர் யோகேஷ்வர் தத். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்த ரஷிய வீரர் பெசிக் குடுகோவ் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் யோகேஷ்வரின் வெண்கலப்பதக்கம் வெள்ளிப்பதக்கமாகிறது.
இதனால் அந்த பிரிவில் வெண்கலம் வென்றிருந்த யோகேஷ்வர் தத் வெள்ளிப்பதக்கத்தை பெறுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச மல்யுத்த சங்கமும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் அறிவிக்கும்.
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு யோகேஷ்வர் தத்தின் வெண்கலப் பதக்கம் வெள்ளி பதக்கமாக மேம்படுத்தப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து பாராட்டியுள்ளார் சேவாக்.