100 வயசு... 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற மூதாட்டி

frame 100 வயசு... 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற மூதாட்டி

Sekar Tamil
அமெரிக்கா:
100 வயசு... 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்... இந்த பாட்டி சிங்கம்.


விஷயம் இதுதான். அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 100 வயது பாட்டி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிப் பெற்றதுடன் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.


இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த மேன் கவுர் (100) என்ற பாட்டி அமெரிக்காவில் உள்ள வான்கோவரில் முதியவர்களுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்துக்கிட்டாருங்க... இதுல இவர் சாதனையே படைச்சிட்டார்.


 போட்டியில் கலந்துக்கொண்ட ஒரே பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்து. மற்ற அனைவரும் ஆண்கள். 100 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் அரை நொடியில் கடந்து சாதனை படைத்துவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்க... வயசுதான் என்னவோ 100... ஆனால் சாதனைக்கு கிடைத்தது தங்கம். இவரது மகனும் ஓட்ட பந்தய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டி சிங்கம்ல... 



Find Out More:

Related Articles:

Unable to Load More