சண்டிகர்:
கொடுத்துட்டாங்க... கொடுத்துட்டாங்க... அரசு பதவியை கொடுத்துட்டாங்க. யாருக்கு தெரியுமா?
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக், ரோஹ்தக் மகரிஷி தயானந்தா பல்கலைக் கழக மல்யுத்த பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மல்யுத்தத்தில் சாக்சி மாலிக் வெண்கலம் வாங்கி கொடுத்து முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்த வீராங்கனை என்ற கவுரவத்தை ஏற்டுத்தினார்.
இதையடுத்து அவரை கவுரவிக்கும் வகையில் ஹரியானா மாநில அரசு ரூ. 2.5 கோடி பரிசு வழங்கியுள்ளது. டில்லி அரசு ரூ.1 கோடியை வழங்க... பரிசுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் ஹரியானா இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சாக்சி மாலிக்கின் சாதனையை மேலும் பாராட்டும் விதமாக ரோஹ்தக் மகரிஷி தயானந்தா பல்கலைக்கழக மல்யுத்த பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்தார் பாருங்க அதிரடியாக.
அதுமட்டுமா? சாக்சியின் பயிற்சியாளருக்கும் பதவி உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.