புதுடில்லி:
பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் புகழ் கொடியை மேலும் உயர்த்திய தமிழ்நாட்டின் "தங்கமகன்" மாரியப்பன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை இந்தியா வென்றது. இதனால் இந்தியா 43வது இடத்தைப் பிடித்தது.
இதில் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் புதிய வரலாறு படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதையடுத்து தற்போது நாடு திரும்பியுள்ள இந்திய வீரர்கள் டில்லிக்கு வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தமிழக வீரர் மாரியப்பன் உட்பட 4 வீரர்களும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.