பான் பசிபிக் ஓபன்... அதிரடியாக வென்ற சானியா ஜோடி...

Sekar Tamil
டோக்கியோ:
பான் பசிபிக் ஓபன் டென்னிஸில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியாக ஜோடி சாம்பியன் கம்பீரமாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.


பான் பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி, சீனாவின் சென் லியாங்- ஜாவோ ஹீயாங் ஜோடியை எதிர்த்து களம் கண்டது.


செம ஹாட் மேட்சாக நடந்த இந்த போட்டியில் சானியா ஜோடியின் அதிரடி ஆட்டத்திற்கு  முன்னால் சீனா ஜோடியால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை. இதனால் சானியா ஜோடி 6-1, 6-1 என நேர்செட் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


சானியா மிர்சா - மார்ட்டினா ஜோடி பிரிந்தனர். இதன் பின்னர்தான் செக் குடியரசு நாட்டின் பார்போரா ஸ்டிரிகோவாவுடன் ஜோடி சேர்ந்தார் சானியா. இந்த ஜோல வாங்கும் 2-வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: