நியூசி. வீரர்களுக்கு பாடம் எடுத்த மாஜி கிரிக்கெட் வீரர் கங்குலி...

frame நியூசி. வீரர்களுக்கு பாடம் எடுத்த மாஜி கிரிக்கெட் வீரர் கங்குலி...

Sekar Tamil
ஈடன் கார்டன்:
சுழற்பந்தை சமாளிப்பது எப்படி என்று மாஜி கிரிக்கெட் வீரர் கங்குலி நியூசிலாந்து வீரர்களுக்கு டிப்ஸ் அள்ளி வழங்கினார். 


என்ன விஷயம் என்றால்... இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஈடன் கார்டனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் சுழற்பந்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்து கங்குலி நியூசிலாந்து அணிக்கு ஆலோசனை வழங்கினார்.


மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவரும், இந்திய அணி முன்னாள் கேப்டனுமான கங்குலி இந்த மைதானத்திற்கு வந்தார். 


அவருடன் நியூசிலாந்து அணி பேட்டிங் பயிற்சியாளர் மெக்மில்லன் மற்றும் அந்த அணி அதிகாரிகளும் பேசினர்.


அப்போது துணைக்கண்டத்தில் நாங்கள் சுழற்பந்து வீச்சுக்கு திணறி வருகிறோம். சில டிப்ஸ் கொடுங்கள் என்று கேட்ட அள்ளி வழங்கி விட்டார் கங்குலியும்.


இடது கை பேட்ஸ்மேன்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். அவர் கூறிய யோசனைகளை நியூசிலாந்து வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.


Find Out More:

Related Articles:

Unable to Load More