3,360 வைர கற்கள், 600 நீலமணி கற்கள், 1.5 கிலோ தங்கம் யாருக்கு தெரியுமா??

frame 3,360 வைர கற்கள், 600 நீலமணி கற்கள், 1.5 கிலோ தங்கம் யாருக்கு தெரியுமா??

J Ancie

குத்துச்சண்டை போட்டிகளில் தோல்வியை எப்பவுமே சந்திக்காத மேவெதர், இன்று வீரர் மெக்கிரிகோரை வென்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அவருக்குப் இப்போட்டியில் பரிசாகக் கிடைத்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி அனைவருக்கும் மலைப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று வென்ற போட்டியின் இறுதியில், வெற்றியாளர் வீரர் மேவெதருக்கு கிடைத்தது பரிசுப்பணம் மட்டுமல்ல.




பொக்கிஷ பரிசாக 3,360 வைர கற்கள், 600 நீலமணி கற்கள், 1.5 கிலோ தங்கம் ஆகியவற்றால் ஆன ஒரு பரிசு பெல்ட்டும் மேவெதருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பெல்ட் முதலையின் தோலில் செய்யப்பட்டது என்பது இதன் தனித்துவம் குறிப்பிடத்தக்கது. உலக குத்துச்சண்டை போட்டிகள் போன வாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குத்துச்சண்டை ஜாம்பவான் ஃப்ளாய்ட் மேவெதர் மற்றும் யூஎஃப்ஸி நட்சத்திர வீரர் கானர் மெக்ரேகார் ஆகிய இருவரும் படுபயங்கரமான மரண மோதல் நிகழ்த்தினர்.


 கடைசி போட்டி


ஆனால் இறுதியில் நானே சிறந்தவன் என்பதை இப்போ நிரூபித்துவிட்டேன். குத்துச்சண்டை ரசிகர்களுக்கு இந்தப் போட்டி கண்ணுக்கும் மனசுக்கும் நிச்சயம் சிறந்த விருந்தாக அமைந்திருக்கும். நான் முன்பு கூறியது போலவே எனது போட்டி ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. எனது கடைசி போட்டி இத்தனை  சிறப்பு மிக்கதாக அமையும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.


Find Out More:

Related Articles: