புதுடில்லி:
வாட்ஸ் அப்புக்கு ஆப்பு விழுமா... விழாதா இதுதான் தற்போது செல்போன் உபயோகிப்பவர்கள் மததியில் பெரும் பேச்சாக உள்ளது.
சமூக வலைத்தளமாக அனைவரின் செல்போனிலும் இருக்கும் முக்கியமானது வாட்ஸ் அப்தான். குரூப்... அந்த குரூப்பில் ஒரு குரூப் என்று இளைஞர்களின் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியதுதான் வாட்ஸ் அப்.
அந்தளவிற்கு முக்கியமாக விளங்கிய "வாட்ஸ் அப்" நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குன்னு கூறி பொது நல மனுவை தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் சுதிர் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுக்க அதுதான் தற்போது நாடு முழுவதும் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பை எகிற செய்தது.
இது மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு வரும் 29ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னைக்குதான் தெரிய போகுது "ஆப்"க்கு ஆப்பா என்று.