பர்ஸ்ட் டைம்... உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை

Sekar Tamil
நார்வே:
பர்ஸ்ட் டைம்... வேர்ல்டிலேயே பர்ஸ்ட் டைம் என்று நார்வே பெருமிதப்பட்டுக் கொள்கிறது. எதற்காக தெரியுங்களா?


உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை நார்வே நாட்டில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுகள் நிறைவடைந்து இந்த திட்டம் விரைவுப்படுத்தப்பட்டிருக்கிறது.


நார்வே நாட்டின் இ39 நெடுஞ்சாலையில் உள்ள கிறிஸ்டியன்சான்ட் மற்றும் டிரோன்டீம் என்ற இடங்களுக்கு இடையில் இரு நிலத்திட்டுகளுக்கு இடையே குறுகிய கடல் பகுதியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.


இந்த மிதக்கும் பாலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் இல்லாமல் 4,000 அடி நீளமுடைய ராட்சத கான்கிரீட் குழாய்களை நீருக்கடியில் அமைத்து, அதனை பலூன் போன்ற மிதவைகளில் இணைத்து தொங்கவிடப்பட உள்ளது.


ஒவ்வொரு சுரங்கப்பாதை குழாயிலும் இரண்டு வழித்தடங்கள் இருக்கும். ஒன்று போக்குவரத்திற்கும், ஒன்று அவசர காலத்திற்கும் பயன்படுத்தப்படும். இந்த பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கும் எந்தவொரு சிக்கலும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்திற்கு 19 பில்லியன் டாலர் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அது 25 மில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாம். 2035ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற திட்டம் இதுவரை வேறு எங்கும் இல்லை... இதுதான் உலகிலேயே முதல்முறையாக நார்வேயில் செயல்படுத்தப்படுகிறது என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறது நார்வே.


Find Out More:

Related Articles: