சீனா:
பர்ஸ்ட் டைம்... பர்ஸ்ட் டைம்... அதிலும் வெற்றி... வெற்றி என்று சீனா உற்சாகம் அடைந்துள்ளது. எதற்கு தெரியுங்களா?
உலகிலேயே முதல் குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இயற்பியல், கணிதம் உட்பட துறைகளின் விதிகளை மேம்படுத்தி குவாண்டம் தகவல் தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின் முதல் செயற்கைக் கோளை சீனாதான் முதல்முறையா விண்ணில் செலுத்தியுள்ளது. அதுவும் வெற்றியாக மாறிவிட்டது.
கன்சு மாகாணத்தில் உள்ள ஜியூக்குவான் நகரிலிருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக் கோளின் உதவியுடன் பரிமாறப்படும் தகவல்களை எவரும் குறுக்கிட்டு யாரும் திருட முடியாது என நம்பப்படுகிறது.