ஆறு அங்குல கத்தியை விழுங்கிய பெண்... ஆபரேஷன் செய்ய டாக்டர்கள்

frame ஆறு அங்குல கத்தியை விழுங்கிய பெண்... ஆபரேஷன் செய்ய டாக்டர்கள்

Sekar Chandra
ஹைதராபாத்:
அள்ளி அள்ளி சாப்பாட்டை சாப்பிட வேண்டிய வயசுல 6 அங்குல கத்தியை முழுங்கி இருக்கு ஹைதராபாத்தை சேர்ந்த 32 வயசு பொண்ணு. என்னம்மா... இப்படி பண்ணீட்டீங்களேம்மான்னு டாக்டர்களும் ஆபரேஷன் செஞ்சு கத்தியை எடுத்து இருக்காங்க... விஷயத்தை பாருங்களேன்.


ஹைதராபாத் அருகே மேடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வப்னா (32). இந்த பொண்ணு கடந்த 11ம் தேதி கைப்பிடி இல்லாத கத்தியை முழுங்கி விட்டார். அது என்ன திருநெல்வேலி அல்வாவா? 


அப்புறம் என்ன லபோதிபோன்னு அவரை தூக்கிக்கிட்டு டாக்டர்கிட்ட போனாங்க உறவினர்கள். அவரும்எ க்ஸ்ரே எடுத்துப் பார்க்க கத்தி வயிற்றுப்பகுதியில் சமத்து பிள்ளையா இருந்து இருக்கு. 


சரி ஆபரேஷன் இல்லாம அதை வெளியில கொண்டு வருவோம்னு டாக்டர்களும் ட்ரை பண்ண கத்தி அழுச்சாட்டியமா நகரவே இல்ல... பொறுத்தது போதும்னு டாக்டர்கள் முள்ளை முள்ளால் எடுப்பது போல ஆபரேஷன் செய்து அந்த கத்தியை எடுத்து இருக்காங்க. இப்ப இதுதான் மருத்துவ துறையில் பெரிசா பேசப்படுது. இதுல என்ன ப்யூட்டின்னா அந்த கத்தி குடலையே, உள்ளுறுப்புகளையோ கிழிக்காமல் இருந்ததுதான்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க.


இனியாச்சும் பசிச்சா... சாப்பாட்ட சாப்பிடுமா...? கத்தியை சாப்பிடாதே.


Find Out More:

Related Articles:

Unable to Load More