வாடிகன்:
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகனில் இன்று (ஞாயிற்நறுக்கிழமை) நடக்கிறது.
20-ம் நூற்றாண்டில் உலக மக்களால் மிகவும் போற்றப்பட்டவர், அன்னை தெரசா. வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளியவர்கள், நோயுற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட அருமையான பெண்மணி. இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது நினைவுகள் அனைத்து தரப்பி மக்களிடமும் உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவுக்கு அவர் புரிந்த அற்புதங்களை அங்கீகரிக்கும் விதமாக ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அப்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ், அன்னை தெரசாவை புனிதர் பட்டம் பெற்றவராக அறிவித்து சிறப்பு செய்கிறார்.
கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதியன்று தனது இறுதி மூச்சு நிற்கும் வரை அன்னை தெரசா ஓய்வின்றி மக்களுக்காக சேவை செய்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இந்த விழாவில் இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு கலந்து கொள்கிறது.